1718 - உலகின் முதல் எந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமை, ஜேம்ஸ் பக்கிள் என்ற ஆங்கிலேயருக்கு லண்டனில் வழங்கப்பட்டது. கப்பல்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இது, (பிற்காலத்தில்வந்த ரிவால்வர்போல!) சுழலும் அமைப்பிலிருந்து 6இலிருந்து 11 குண்டுகள்வரை தொடர்ச்சியாகச் சுடவும், அதன்பின் குண்டுகள் நிரப்பப்பட்ட மற்றொரு சுழலை நிரப்பிக்கொள்ளவும்கூடியதாகவும் இருந்தது. 1722இல் புயல் மழைக்கு நடுவே நிமிடத்திற்கு 9 குண்டுகளை இத்துப்பாக்கி சுட்டுக்காட்டியது.